பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வெறும் தோற்றத்தைவிடப் பேசிக்கொண்டிருக்கும் இயங்குநிலையில் சித்திரித்திருப்பது உயிரோவியமாகிறது. இடையிடையே மறுப்புரை, எள்ளல், நகையாடல், கைதட்டு இருப்பதல்ை மின்னலுடன் மழை பொழிவதை உவமை கூறுகிறார். நிற்காது பேசுகின்ற என்பது, காலூன்றி நின்று பேசுதற்கியலாத நிலையில் எப்போதும் அமர்ந்து பேசுதலை மட்டுமின்றி, இடையே தட்டுத்தடுமாறி நிற்காமல் சரமாரியாகப் பேசுதலையும் குறிக்கிறது. அவருடைய கண்ணின் ஒளியும் கருத்தின் ஒளியும் காண்போரையும் ஊடுருவி நிற்கும் எனக்காட்டுவது, பொலிவிற்குப் பொலிஆட்டும் சித்திரத்திறகுைம். பற்பல புதிய உவமைகள் இடம்பெற்று ஆசிரியரின் அனுபவத்தையும் இலக்கியக் கலைத்திறனையும் விளக்குகின்றன.

காப்பியக் கதையே நம்பவியலாப் புராணத்தன்மை பெற்றதாயிருக்குமெனல் அதன் பழையநிலை. எனினும் அழுத்தம்பெறப் புனைதலில், முடியரசர் பாவியத்திலும் அக்கூறு தலைநீட்டுகிறது. பண்டிதமணியவர்களே கூறியாங்கு, பழம்பெரு நூல்களையெல்லாம் பயில்கின்ற பொழுது, அவற்றை முன்கூட்டியறிந்திருந்தது போன்ற நினைவும் தெளிவும் அவருக்கு ஏற்பட்டனவாம்.

“படித்தனன் எங்கோ முன்னர்ப்
      படித்தது போன்றுணர்ந்தான்” (2:22)


“கற்பிக்கும் ஆசான் இன்றித்
      தனிமையில் அனைத்தும் கற்றுத்
தக்கதோர் புலமை பெற்ருன் (2:23)


“சொல்லிய ஆசான் பாடஞ்
      சொல்லுமுன் உணர்ந்து கொண்ட
நல்லியற் புலமை கண்டு
      நயந்தவர். வியந்து நின்ருர்’ (2:29)

இவ்வாறு மணியார்க்குக் கல்வி கைவரப் பெற்றதன் காரணத்தைக் காப்பியப் புலவர் நடுநிலையோடு நவில்கின்றார்.

'ஒருமையில் கற்ற கல்வி
      உதவிடும் எழுமை என்ற
மறைமொழி புகன்ற வாய்மை