பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

30

பண்டிதமணியாரின் நட்புச் சிறப்பைப் பாடுமுகத்தான் குன்றக்குடி அடிகளின் சிறப்பைக் குன்றின் மீதிட்ட விளக் காகப் புனைந்துள்ளார். மறைமலையடிகள், நாட்டாரையா போன்ற பலரை விளக்கும் திறன், கவிஞரின் உணர்வு, ஈடுபாடு ஆகியவற்றைப் புலப்படுத்துகிறது.

முருக பத்தர் ஒருவர் பண்டிதமணியின் சமயப் பற்றை நினைத்து, அவரை ஏமாற்றி ஐயாயிரம் ரூபாய் பெறலாம் என எண்ணி வந்து நாடகமாடியபோது, தாமும் அதனேயே பின்பற்றி அவரைச் சொல்லாமல் ஓடவைத்த செய்தி நகைச்சுவை மிளிர்வதாகும் மயக்குருக் காதை படிப்படியாக, நகைச்சுவையை வளர்க்கும் பான்மை படித்து இன்புறத்தக்கது. கையில் காசில்லாதபோது 'பணமுடை’ என்பது ஒரு வழக்காறு. அதனைப் 'பணம் உடையார்’ என்றும் 'பன முடையார்’ என்றும் பிரித்து, இரட்டுற மொழிதலாக நயந்தோன்றக் கூறலாம். பண்டிதமணி குடும்பத்தார் 'பன முடையார்' என்று மகட்கொடை நேர்திதோர் சற்றே மறுதளித்தபோது, மேலைச்சிவபுரி வ. பழ. சா. பழநியப்பர் பணம் உடையாராதலில்லை; அக் கவலையைத் தவிர்க்க உதவினராம். இத்தகைய சுவையான, இலக்கிய நயந்தோற்றும் பகுதிகள் இதிற்பலவுள. இலக்கிய நயம் பாராட்டுதலில் ஈடும் எடுப்புமற்றவரென மதிக்கப் பெற்ற ஒருவரது வரலாற்றுக் காப்பியமும் இத்தகைய நயங்களால் பொதுளப் பெற்றிருத்தல் சாலச்சிறப்பேயன்றா?

காப்பிய நாயகர்

பண்பு நலன்கள்

காப்பிய நாயகராம் கதிரேசரின் குணநலன்களும் இயல்புகளும் ஆற்றலும் அறிவும் இந் நூலுள் நடப்பியலாக நன்கு எடுத்தோதப்பட்டுள்ளன. இவ் வகையில் மிகைப் புனேவைத் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது. எப்பொழுதும் எதிலும் திருத்தமும் செம்மையுமே மணியாரின் குறிக்கோள்கள். உணவும் சுவையாக, நன்ருக அமைய வேண்டுமென அவர் விரும்புவர்.