பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

32

வாழ்க்கை கொண்டவர். எனவே இவர் வாக்கில் இவ்வட்டார வழக்குகளும் இவர்தம் பழக்கவழக்கங்களும் வெளிப்படுதல் இயல்பேயாம். சிலசமயங்களில் இவர் பாடும்போது, நகரத்தாராய்ப் பிறந்தவர்க்குத் தலையைச் சற்றே நிமிர்த்திக் கொள்ளலாம் போலத்தோன்றும்.

“இலக்கியப் பண்பா டின்னும்
இருக்கிற தென்றுகூறித்
துலக்கிடச் செட்டி நாடே
துணையெனச் சொல்லலாகும்’ (1:4)

சைவமும் தமிழும் தழைத்தினி தோங்க, நாளும் பணிபுரியும் நகரத்தாரைப் பின்புலமாகக் கொண்ட வரலாறு இது. எனவே மகிபாலன்பட்டியில் வாழ்வோர், பொருளினுல் மிகுந்த மேலோர், புலமையிற் சிறந்த நூாலோர்’ என்று போற்றப்படுகின்றனர். 'திரைவழி கடந்து சென்று, திறமையால் ஈட்டுவார்' காட்டப் படுகின்றனர். உருவினால் சிறிய தவ்வூர், உளத்தினுல் சிறந்த மாந்தர் எனப் பாராட்டி, வளரிளம் காடு சூழ்ந்து வனப்பினில் பொலிந்து தோன்றும், குளமெலாம் மீன்கள் துள்ளிக் குதித்திடும் இயற்கையைக் காட்டி,

“மனமதில் அமைதி காட்டி மதிவளர் புலமை கூட்டும்
கனவுல கொன்று காட்டிக்
கவிதையும் படைத்துக் காட்டும்’ {1:10)

என அவ்வூரைச் சிறப்பிக்கின்ருர் ஆசிரியர். ஆனால் அவ்வூர் பண்டிதமணியார் பொதுப்பணியிலீடுபட்டு நன்மை சில செயுமுன்னர் எவ்வாறு இருந்ததென எடுத்துரைக்குமிடத்து, அகன் மழைக்காலச் சேற்றுநில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அவ்வூருக்குப் போகும் வழிதான் பெரிதும் இடர்ப்பாடானது. திருமணம் முடிக்கவர் பெண்ணழைத்துப் போகுமுன் மழைவந்து. ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால் மூன்று நாளாலுைம் காத்திருந்துதான், வெள்ளம் வடிந்த பின் தம்மூர் போக வேண்டுமாம். இதல்ை அவ்வூரில் சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பெரிதும் தயங்குவராம். இந் நிலைமையை நீக்க அரும்பாடுபட்டுப் பண்டிதமணியார் முயன்ருர். பாலம் கட்டுவித்துப் பாதையைச் செப்பனிட்டார்; ஊருக்குள் அஞ்சலகம், பள்ளிக்கூடம் வரச்செய்தார். இவற்றைப் பாட்டில் வடிக்குமழகு படித்தின்புறத்தக்கது.