பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

35

“கடல்கடந்து நெடுந்தொல்வு சென்றிடுவர்
கணக்கிலநாள் அங்கிருந்து கொண்டு விற்பர்;
மடல் வரைந்து மனேக்கிழத்தி மனம்மகிழ
மறவாமல் உய்த்திடுவர்; நெடுநாள் தொட்டுத்
தொடர்ந்தெழுந்த ஆள்வினையால் தொகை
மிகுத்துத்
தாய்நாட்டுத் துறைமுகத்தை நோக்கிவந்து
படர்ந்துவரும் ஆர்வத்தாற் கால்வைப்பர்
பலபல நல் லறஞ்செய்யக் கால்கோள்வைப்பர்’

(3:1, 2)


குலவிவரும் செல்வத்தைப் பெட்டகத்துட் குவித்தெடுத்துப் பார்ப்பது ஒரு வழக்கம் (3:7). 'ஆண்டு பதின் மூன்றானால் ஆடவர்தம் திருமணத்தை அதற்கப்பாலும் தாண்டவிடமாட்டார்கள்; தன வணிகர் வழக்கமிது; மரபின் கொள்கை பூண்டொழுகும் குலம்’ (4:1.) தமிழர்கள்ளே பழம்மரபில் பற்றுடையவர்கள் (Conservatives). நகரத்தார்களோ அதனிலும் ஆழமான மரபுபோற்றும் மனத்தினர்.

இங்ங்னம் நலம்பாராட்டினலும், திருமணத்தில் அவர்கள் பணமே பெரிதென்று பகட்டித் தம் பண்புக்கு மாறாகப் பிடிவாதத்துடன் செயற்படுவதைத், தலைமேல்டித்துக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை.

“குலம்பார்ப்பர், குவிசெல்வ வளம்பார்ப்பர்,
குடிபார்ப்பர், சீரும் பார்ப்பர்,
நலம்பார்ப்பர், கலன்பார்ப்பர் நடந்துவரும்
நடைபார்ப்பர், உடையும் பார்ப்பர்,
நிலம்பார்ப்பர், நாகரிக மனே பார்ப்பர்,
நிகழ்மனத்தில் அறிவு, பண்பு
நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர்
நகரத்தார் நிலைதான் என்னே’

(4:3)

இங்ஙனம் இந்நூலுட் காணும் நகரத்தார் நிறை குறைகள் பற்றிய பல கருத்துகள் தொகுத்துக் காணுதற்குரியனவாம். இது நகரத்தார் ஊடே இருந்து பார்த்த பிறரொருவர் பார்வையாக இருப்பதனால் கூர்மையாகவும் சீர்மையாகவும் பதியத்தக்கதாகவுளது.