பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1966இல் "முடியரசன் கவிதைகள்" என்ற நூலும், 1973இல் "வீரகாவியம்" என்ற நூலும் தமிழக அரசின் பரிசிலைப் பெற்றன. சிறப்புக்குரிய பலபாடல்கள் சாகித்திய அகாதெமியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

1966இல் பறம்பு மலையில் நடந்த பாரிவிழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர்க்குக் "கவியரசு" வழங்கிச் சிறப்புச் செய்தார். 1979ஆம் ஆண்டு பெங்களுர் உலகத் தமிழ்க் கழகத்தினர் இவரை அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பொற்பேழையும் வழங்கினர். இதுபோலவே இவர்பாற் பயின்ற மாணவர் மணிவிழா நாளன்று (7-10-1979) பொன்னடை போர்த்துப் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தனர் என்னும் பட்டம் சிலர் இவர்தம் 1980ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக மாநில இலக்கிய அணி, நிறைவு விழாவினை நடத்தியது. கவிஞரின் அறுபதாம் ஆண்டு அப்பொழுது கழகத்தின் சார்பில் டாக்டர் கலைஞர் அவர்கள் பத்தாயிரம் வெண்பொன் பொற்கிழி வழங்கிப் பாராட்டிச் சிறப்புச் செய்தார். 1983ஆம் ஆண்டு தமிழகப் புலவர் குழு தமிழ் சான்றோர் என்னும் விருது வழங்கி சிறப்பித்தது.

எல்லா நம்பிக்கைகளிலும் மேலானதாக அவர் கொண்டிருப்பது "என்றும் நானோர் இளைஞன்" என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கை சுவையும், பயனும் முதிர்ந்த புல கவிதைகளை மேலும் தரும் என்று நம்புவோமாக.

*