பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிரெழு காதை


விசுபுரட் டாசித் திங்கள்
லுெள்ளியாம் இரண்டாம் நாளில்
பசுபதிக் குரிய தென்று
பகருமா திரைநன் னாளில்
பசுமையிற் பொலியும் அந்தப்
பதியினர் பெற்றோர்ர் மற்றோர்
நகைமிகு தமிழ்த்தாய் செய்த
நற்றவப் பயனைக் கண்டார்
18

கதிரொளி தரும்பிள் ளைக்குக்
கதிரேசன் எனும்பே ரிட்டார்
மதியொளி முகத்திற் கண்டு
மகிழ்ந்தனர் உற்றார் பெற்றார்
எதிரென எவரு மில்லா
இளம்பிள்ளை இரண்டாண் டாகப்
புதுமெரு குடனே நாளும்
பொலிவுற வளர்ந்த தங்கே
19

வரும்பகை யனைத்துந் தாங்கி
வளர்தமிழ் மொழிக்கோர் ஆக்கம்
அரும்புதல் காணின் ஆங்கே
அல்லலும் அணுகு மாபோல்
பெருங்கதிர் மணியைப் பாழ்நோய்
பிடித்தது மூன்றாம் ஆண்டில்
இரும்படர் தந்த நோயை
இளம்பிள்ளை வாதம் என்றார்

20