பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சபைகாண் காதை


திருக்கோயில் பல எழுப்பச் சிதைவிடத்துத்
திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக் கட்ட
வெருக்கொள்ளும் வெயில் நாளில் வேட்கையுடன்
வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப் பந்தம்
உருக்கொள்ளு மாறமைக்க, உணவுதரும்
அறச்சாலை உண்டாக்கக் குளங்கள் தோண்டப்
பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது
பெருமைஎனப் பேணுவது வணிகர் நாடு!1

கடல்கடந்து நெடுந்தொலைவு சென்றிடுவர்
கணக்கில நாள் அங்கிருந்து கொண்டு விற்பர்
மடல் வரைந்து மனைக்கிழத்தி மனமகிழ
மறவாமல் உய்த்திடுவர்; நெடுநாள் தொட்டுத்
தொடர்ந்தெழுந்த ஆள்வினையால் தொகைமிகுத்துத்
தாய்நாட்டுத் துறைமுகத்தை நோக்கி வந்து
படர்ந்துவரும் ஆர்வத்தாற் கால்வைப்பர்
பலபல நல் லறஞ்செய்யக் கால்கோள் வைப்பர்2


1. வெளிநாட்டு வாணிகத்தைக் குறிக்கும்

செட்டிநாட்டு வழக்குச் சொல்.