பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சபைகாண் காதை

௨௭

“கலைமகளின் திருவுளத்துக் குறிப்பறிந்து
களிதடஞ்செய் திருமகளும் இயங்கி வந்தாள்;
நிலைபெறுமோர் திருவினியை நிலையாத
உலகத்தில் நிகழ்த்துவது நிதிபெற் றார்க்குத்
தலையாய பணியாகும் எனுமுணர்வைத்
தகுபொழுதில் கதிரேசர் விதைத்து விட்டார்;
கலையாத ஆள்வினேயர் பழநியப்பர்
கருத்துக்குள் முளைத்தெழுந்து கதிர்க்கக் கண்டார் 12

அரசன்சண் முகனர்தாம் தலைமை பெற
அவ்வூரில் அவையொன்று கூடிற் றாகப்
பரசுபுலஞ் சான்றோரும் வந்திருந்து
பற்பல நற் கருத்தெடுத்துப் பகர்தல் கேட்டுப்
பரிவுகொடு நன்காய்ந்து பாராட்டும்
படியாக முடிபொன்று படைத்து நின்றார்;
தரிசு நிலம் விளைநிலமாய்ப் பயனளிக்கச்
சபையொன்று காண்பதெனத் தீர்வு செய்தார் 13

நன்றாய்ந்து சீர்துாக்கி அவர்கண்ட
நலம்பயக்கும் முடிபதனால் நானி லத்து
நின்றார்ந்த புகழ்பரப்புஞ் சன்மார்க்க
சபையொன்று நெடிதோங்கி நிற்கக் கண்டோம்;
வென்றாரும் அறியாத தமிழ்தழைக்க
விளைநிலம் போற் கல்லூரி யொன்று கண்டார்;
சென்றாரும் எளிமையில்நூல் பயிலுதற்குச்
செந்தமிழ்நூல் நிலையமொன்றும் தொடங்கி வைத்தார். 14