பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௩௪

ஊன்றுகோல்


நலந்தந்த சங்கரரும் [1] ஆட்டு வித்த
நடேசருமென் தெய்வங்கள்; நாளும் நாளும்
வலம் வந்தே அருள்பெற்ற கோவி லுக்குள்,
மல்லிங்க சாமியொரு சாமி, எதற்குக்
குலந்தந்த தமிழ்தந்த முத்து சாமி
கும்பிட்டு நான்மகிழ்ந்து நத்துஞ் சாமி
உளம்தந்து பாருலகின் இயல்புங் காட்டி
உய்வித்த செல்லப்பர் மற்றோர் தெய்வம் 33
கதிர்மணிபாற் கற்றுணர்ந்த தலைமா ணாக்கர்,
கான்முளையாய் அவர்க்குப்பின் விளங்குஞ்
செம்மல்,
புதுமுறையாற் றமிழாயும் புலமை யாளர்,
போதுமெனும் மனங்கொண்டு வாழும் நல்லர்,
இதுசரியென் றவர்மனத்திற் கொள்வ ராயின்
எப்பொருட்டும் பிடித்தபிடி விடாத நெஞ்சர்,
முதுபுலவர் ஏற்றிருந்த சபைப்பொ றுப்பை
முற்றுணர்ந்த மாணிக்கம்[2] ஏற்றுக்
கொண்டார் 34
பொருட்டுறையில் சபைதளரும் நிலைய றிந்து
பொறுப்பேற்ற மாணிக்கம் கல்விக் கீயும்
அருட்கொடையோர் இவ்வுலகில் இன்று முள்ளார்
ஆதலினால் திரட்டுதும்யாம் எனத்து ணிந்து
மருட்கடலுங் கடந்துபொருள் தொகுத்து வந்து
வளர்க்கின்றார் மாணிக்கத் தூணாய் நின்று:
திருச்சபையும் சீனிதுணை[3] யாகி நிற்கத்
திருக்குறள் போல் தன்னிறைவாற் பொலிதல்
கண்டோம் 35


  1. க. சங்கரநாராயணப்பிள்ளை, நடேச ஐயர், மல்லிங்க
    சாமி, முத்துசாமிப்புலவர், வீர. செல்லப்பனார் இவர்கள் ஆசிரியர்கள்.
  2. துணைவேந்தர் வ. சுப. மா.
  3. பழநியப்பர் பெயரர் சீனிவாசன்