பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. மணம் புணர் காதை



ஆண்டுபதின் மூன்றானால் ஆடவர்தம்
திருமணத்தை அதற்கப் பாலும்
தாண்டவிட மாட்டார்கள் தனவணிகர்
வழக்கமிது; மரபின் கொள்கை
பூண்டொழுகும் குலத்துவரும் பூங்குன்றப்
புலவருக்கோ முப்பான் ஆண்டு
தாண்டியுமப் பேற்றுக்குத் தகுதிதர
அக்குலத்தார் தள்ளி நின்றார் 1

நூலொன்றும் பொருளுணர்ந்து நயமுணர்ந்து
நுவல்கின்ற நிறைபு லத்தார்
காலொன்றுங் குறையறிந்து பெண்கொடுக்கக்
கருதுபவர் எவரு மில்லை;
வேலொன்று தருபுண்ணில் வெந்தழல்தான்
வீழ்வது போல் வெந்து நொந்து
நாளொன்று வாராதோ எனக்கலங்கி
நலிந்துழன்றார் அவரை ஈன்றார் 2