பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணம் புணர் காதை


பாவமுதின் எண்சுவையும் தோய்ந்தெ டுத்துப்
பகர்கின்ற வாயுடையார்; படைத்து வைத்த
நாவமுதின் அறுசுவையும் நன்கு கண்டு
நுகர்கின்ற நாவுடையார்; வடித்துத் தந்த
பூவமுதின் வாசகத்தைத் துய்க்குங் காலைப்
புனல்மல்கும் விழியுடையார், மணியார் நாளும்
காவமரும் மலர் சூழும் கரும்பு போலக்
காலமெலாம் சுவைவாழ்வு வாழ்ந்து வந்தார் 18

பாச் சுவையிற் குறைகாணின் எடுத்துச் சொல்லிப்
பாங்குபெற வழியுரைக்கும் ஆற்றல் போல
நாச்சுவையிற் குறையிருப்பின் சுட்டிக் காட்டி
நன்கடிசில் அமைவதற்குப் பக்கு வத்தை
[1]ஆச்சியிடம் எடுத்துரைக்கும் அழகு காணின்
அடடாஓ என நமக்கு வியப்புத் தோன்றும்;
நூற்சுவையார் எச்சுவையும் ஆழ்ந்து நோக்கும்
நுண்ணறிவுப் புலனுணர்வுத் திறந்தான் என்னே!19


கற்பனை படைத்துக் காட்டும்
கலையுல கதனில் வாழ்வோர்
முற்படும் உலக வாழ்வின்
நடைமுறை முற்றுந் தேறார்;
கற்பனை ஏடு வேறு
காண்குறும் நாடு வேறு
சொற்பொருள் உண்மை உண்மை
தொன்றுதொட் டியற்கை யாகும் 20


  1. பெண்டிரை ஆச்சியென்பது செட்டிநாட்டு வழக்கு.