பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. மயக்குறாக் காதை

மெய்ம்மைச் சமயம் விழைபவர் ஆயினும்
பொய்ம்மைச் சமயப் போர்வையுள் நடக்கும்
கயமைச் செயலைக் கடிவதிற் சற்றும்
தயக்கங் காட்டார்; தமிழ்மணி வாழ்வில்

நடந்த சமயப் போலியின் நடிப்பும்
5

தொடர்ந்திவர் கொடுத்த படிப்புஞ் சொல்லுவாம்;
காற்றும் வெளிச்சமும் கலந்து விரவும்
கீற்றுக் கொட்டகைக் கீழமர்ந் திருந்து
பயிலுதல் எழுதுதல் பண்டிதர் வழக்கம்;

துயிலெழுந் தொருநாள் தொன்னூல் ஒன்றைப்
10

படித்துச் சுவைத்துப் பழநூ லதனுள்
தொடுத்த விழியொடு தோய்ந்தினி திருக்க,
குளிர்புன லாடித் தளிர்புரை மேனியில்
ஒளிபெறு திருநீ றொருங்குறப் பூசி

உருத்தி ராக்க உயர்வடம் பூண்டு
15

 பருத்துயர் மேனியர் பத்தர் ஒருவர்
முருகா முருகாஎன் றுருகும் வாயர்
அருகே வந்தவர் அன்பின் வடிவாய்