பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்



முகிழ்த்த விழியொடு முருகா எனக்கை
குவித்து நின்றனர் கோலம் பொலிவுற: 20
கோலப் பொலிவாற் சீலத் தவர்போற்
காணப் படுமவர் காட்சியின் மயங்கிப்
பண்டிதர் எழுந்து பணிவுடன் வணங்கி
‘அண்டர் போல்வரும் அடியீர் இருக்கையில்
அமர்ந்தருள் செய்க’என் றன்புரை கூறியும் 25
அமர்ந்திலர், அடியவர் அன்பின் பெருக்கால்
தம்முகம் மாறிக் கண்புனல் மல்கி
மும்முறை வாயால் முருகா என்றனர்;
பத்தியின் பெருக்கைப் பார்த்த புலவர் 30
உத்தியால் இயல்பை உணரா ராகிப்
பொய்த்தவ வேட முத்த நாதப்
பத்தனைக் கண்ட மெய்ப்பொரு ளார்போல்
தாமும் மாறித் தம்முளம் நெகிழ்ந்து,
பெரியோர் இயல்பின் பெற்றிதான் என்னே!
அருளாற் பெரியீர் அமர்ந்தினி திருந்து 35
கட்டளை யிடுக’ என்று கழறிப்
பெட்டவர் பன்முறை வேண்டிய பின்னர்
உற்றவண் அமர்ந்தனர் உறுதவ வேடர்;
“எத்தகு பத்தி! எத்தகு காட்சி
ஆ!ஆ! முருகா அருளல் வேண்டும் ” 40
என்ன மணியார் பன்னிய பின்னர்த்
தென்முகக் கடவுள் சின்முத் திரைபோற்
கையை அமைத்துக் காட்டி யதன்பின்,
பைய வாயாற் பத்தர் பேசினர்;
'முருகா முருகா கருதிய பயனைப் 45
பெறுவான் வந்திலன் பேணிய அன்பணைக்