பக்கம்:ஊரார்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11 "மூஞ்சியைப் பாரு. புருவத்தைச் சிரைச்சுக்கிட்டு ...கண்ருவி...” சாமியார் குமாருவிடம் முணுமுணுத் தார். பக்கோடா வாசனைக்கு நாய் ஒன்று ஓடிவந்தது. "பக்கோடா வாசனையை நல்லா மோப்பம் புடிப்பே. திருடன் வந்தா கோட்டை விட்டுடுவே. இந்தா, தொலை...” - மீண்டும் வானத்தில் விமானம் பறக்கிற சத்தம். சாமியார் நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்பும் போது கொடிக் கம்பம் அவர் மார்வையில் பதிந்தது. அதில் மூவண்ணக் கிழிசல் கொடி ஒன்று தன் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது. "இந்த ஊர் கட்சித் தலைவன் மாலை போட்டுக்க வருவான். வோட்டுக்கு வருவான். வசூலுக்கு வருவான். நீட்டா அங்கவஸ்திரம் போட்டுக்குவான். இந்தக் கொடியை-ஒருநாளாவது நிமிர்ந்து பார்ப்பான? ஏன் பின்னே கட்சி இந்த கதிக்கு வராது?’ சாமியார் உறும லோடு சிரித்தார். - அடுத்தாற்போல் நாட்டாமைக்காரன் வந்தான். "என்ன சாமியாரே! உஷ்ணத்துக்கு மருந்து கேட் டேனே. வச்சிருக்கியா?” r "இந்தா என்று அந்தச் சீட்டை எடுத்துக் கொடுத் தார் சாமியார். - w "இதைப் படி, உஷ்ணம் குற்ையும். காலண்டர் கேட்டேனே, எங்கே?” . r . ஒய்.விஜயா போட்ட காலண்டரை எடுத்துக் கொடுத் தான் நாட்டாமைக் காரன். அந்தக் காலண்டர் சுருளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/11&oldid=758693" இருந்து மீள்விக்கப்பட்டது