பக்கம்:ஊரார்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


}; 'ஒகோ' என்று பல்லக் கடித்தார் சாமியார். அட: பாவி என்பது அதன் அர்த்தம். "நீங்க மனசு வெச்சாத்தான் முடியும். காலேயிலே கருக்கலோட வீட்டுக்கு வந்துடுங்க.” "எள்ளு இருக்கா?" "மூட்டை மூட்டையா இருக்கு..." "ஆளாக்கு எள்ளை எடுத்து ராத்திரியே தண்ணிலே ஊறப்போட்டு வை. பனவெல்லம் கொஞ்சம் வேணும்...” "ஆவட்டும்...” வேதாசலம் திரும்பிப் போய் விட்டான். "அயோக்கியன், இவன் என்னைப் பார்த்து பதினறு வயசு கேட்குதான்னு கேலி பேசமுன்... வீதியிலே பெரிய மனுசனட்டம் உலாத்திக்கிட்டு வீட்டுக்குள்ளே நடத்தற அக்கிரமம்...ம்... பாவம், பாவம், இந்தப் பாவத்துக்கு நான் வேறே ஒடந்தையா? சாமியார் உறுமினர். காலை வேளையில், இருட்டு பிரியாத முன்பே, சாமி யார் அந்த வீட்டுக்குள் வந்திருப்பது குமாருக்கு ஆச்சரிய மாயிருந்தது.

  • டேய், குமாரு வாசக்கதவைச் சாத்துடா. சாமி! இப்படி சோபாவிலே உட்காருங்க. இட்லி சாப்பிடlங் களா?”

வேணும்:

    • ιο.",»

"காப்பி இருந்தா குடுங்க..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/15&oldid=758697" இருந்து மீள்விக்கப்பட்டது