பக்கம்:ஊரார்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 'அயோக்யன், வனஜா சீதையுமில்லே. உன் மாமன் வேதாசலம் லட்சுமணனும் இல்லே. அண்ணன் சம்சாரத் தையே கெடுத்தவனே நீ நல்லவன்னு நம்பிக் கிட்டிருக்கயா? ஏன் புயல் அடிக்காது? ஆளுக்குள்ளே ஆளு. அதான் சொன்னனே. இந்த ஒலகத்திலேயே ஒவ்வொரு மனுசனுக்குள்ளேயும் இன்னுெரு ஆள் இருக் கான். சில நேரத்திலே அந்த உள்ளுக்குள்ளே இருக்கிற ஆளு வெளியே வருவான். நல்லாப் பேரு வெச்சான் இந்த சினிமாவுக்கு-சில நேரங்களில் சில மனிதர்கள். அதிலே ஒருத்தன் உங்க மாமன். அவனைப் போயி நல்லவன்னு சொல்றியே! நம்பிக்கிட்டிரு. நாமத்தைப் போடுவான் உனக்கு. ஊர் சொத்தைக் கொள்ளே அடிச்சுக்கிட்டு அண்ணன் பெண்ஜாதியைக் கெடுத்துகிட்டு... நீ ஆட்டுக் குப் போடா, உங்க மாமன் பாக்கப் போருன். சந்தேகப் படுவான்.: அப்போது அந்தப் பக்கமாக டெய்லர் கடை கேசவன் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். சாமியார் ஒமேகா வைப் பார்த்தார். அது 7.50 காட்டியது. இந்த இருட்டு வேளையிலே இவன் இப்படி எங்கே போகிருன் என்று சாமியார் சந்தேகப்பட்டார். சாவடிப் பக்கம் சைக்கிள் திரும்பியது. அங்கே ஆப்பக் கடை ராஜாத்தியின் உருவம் தெரிந்தது. சற்று நேரத்தில் அவர் கள் இரண்டு பேரும் சாவடிக்குள் நுழைவதும் தெரிந்தது. 'இது வேறே ஒரு கேஸ்-தனிக் கதை' என்று சாமி யார் சிவித்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/19&oldid=758701" இருந்து மீள்விக்கப்பட்டது