பக்கம்:ஊரார்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 பாக்கெட்டுக்குள் கையை விட்டான். ஒரு பர்ஸ், கனமான பர்ஸ், வெளியே வந்தது...... 'இது ஏது உனக்கு? 'பொள்ளாச்சி சந்தையிலே அடிச்சேன். ஆயிரத்து இருநூறு ருவா. இதைப் பத்திரமா வச்சிரு. காலையிலே வந்து வாங்கிக்கறேன். இதிலே புள்ளையாருக்கு நூறு. ரூபாl: ; "போலீசைக் கூப்பிட்வா "இன்ன சாமியாரே, பயமுறுத்தறயா? அவுட் போஸ்ட் எம்மேலே கை வைச்சிருவான? கிழிச்சிறமாட் டேன். இந்தா புடி மரியாதையா:வெச்சுக்கோ.........: "தொட மாட்டேன் பாவப் பணம்.” "புடிக்கப் போறியா, இல்லையா? "இல்லேன்ன...? பக்கிரி இடுப்பிலிருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்து சாமியார் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு போனன். சாமியார் பயந்து போளுர். - "இதை வெச்சுக்கோ. இப்ப வூட்டுக்குப் போறேன். பெண்ஜாதி இந்த பர்ஸைப் பார்த்தா ஏதுன்னு கேப்பா. திருடினதுன்னு தெரிஞ்சா ஊரைக் கூட்டுவா. அப்புறம் ஊருக்குள்ளே என் மரியாதை என்ன ஆகும்? - "உனக்கு மரியாதை வேறே இருக்குதா ஊருக் குள்ளே? சாமியார் எண்ணிக் கொண்டார். பக்கிரி மணிபர்ஸ்ை சாமியார் மீது வீசிவிட்டு சார்மினர் வச்சிருக்கியா? ஒண்ணு குடு" என்ருன். கொடுத்தார். பற்ற வைத்துக் கொண்டு காலையிலே பாக்கறேன் என்று கூறிப் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/22&oldid=758704" இருந்து மீள்விக்கப்பட்டது