பக்கம்:ஊரார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


சட்டுத் தரேன்னு சொன்குங்க என்ருன் அந்தத் திண்டிவனத்து ஆள். "நான் பாங்க்கா வச்சிருக்கேன்? ஆண்டிகிட்டே ஏது பனம்?’ சைக்கிளில் பக்கிரி வந்தான். அவன் முக த்தில் அவசரம் தெரிந்தது. சற்று தூரத்தில் ஒரு காலை பெடலில் வெத்தபடியே "தரீங்களா... என்று கேட்டான். - சாமியார் எடுத்துக் கொடுத்தார். பக்கிரி அதிலிருந்து நூறு ரூபாய் நோட் ஒன்றை உருவி சாமியாரிடம் கொடுத்துவிட்டு வேகமாய்ப் போய் விட்டான். திண்டிவனத்து ஆசாமியை எதிரில் வைத்துக் கொண்டு சாமியாரால் அதிகம் பேச முடியவில்லை. - "இந்தா நூறு ரூபா இருக்குது. புள்ளேயார் கோயில் கட்டறதுக்குன்னு கொடுத்தான். எடுத்துட்டுப் போய்க் கொடு. குளந்தீங்கல்லாம் நல்லாருக்குதா? ஜாரிச்சேன்னு சொல்லு.” 3 - திண்டிவனம் ஆள் போய் விட்டான். குமாரு வந் தான். சாமியார் ஒமேகாவைப் பார்த்தார். அதை மறந்து போய்க் கையில் கட்டியபடியே தலைமுழுகியி ருந்தது அப்போதுதான் தெரிந்தது. "இன்ன ஆச்சுடா வனஜாவுக்கு? -குமாருவைக் கேட்டார் சாமியார். "வாயிலெடுத்துட்டுதான் இருக்காங்க...” *சரியாயிடும்...' "இந்தாங்க, வனஜாம்மா குடுத்திட்டு வரச் சொன் ளுங்க” எவர்சில்வர் டியன்பாக்ஸைச் சாமியாரிடம் கொடுத்தான் குமாரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/25&oldid=1281504" இலிருந்து மீள்விக்கப்பட்டது