பக்கம்:ஊரார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 "இன்னடா இது வாசண் பலமா இருக்குது?" கோளி பிர்யாணி, ஆட்லே செஞ்சாங்க..." பசிக்கு சாமியார் ஒரு பிடி பிடித்தார். தண்ணிரைக் குடித்தார். ஏப்பம் விட்டார். 'கோளி விடியக்கால சிக்கிரம் எளுப்பிடும்டா! கோளியாச்சே!” என்று சிரித்தார் சாமியார். எங்கிருந்தோ அந்த நாய் ஓடி வந்தது. "இந்த நாய்க்குதான் எங்கே மணக்குமோ? சனியனே, இந்தாத் தொலை..." மிச்ச பிர்யாணியை, டிபன் பாக்ஸைக் கவிழ்த் துக் கொட்டினர். . திடீரென்று ஊர்நாய்களெல்லாம் சேர்ந்து குலைத்தன. காது செவிடு பட்டது. நரிக்குறவர்கள் கூட்டம் ஒன்று அரோரத்தில் வந்து முகாம் போட்டுக் கொண்டிருந் தார்கள். - குமாரு அவர்களை வேடிக்கை பார்க்க ஓடி விட்டர்ன். ஒமேகாவை ஆட்டிக் காதில் வைத்துப் பார்த்தார். அது ஒடிக்கொண்டிருந்தது. மணி பன்னிரண்டரை. ட்ராமாக்காரி ரத்னபாய் வந்தாள். பிள்ளையாரைச் சுற்றினுள் விளக்குக்கு எண்ணெய் ஊற்றிஞள். "இத்தாங்க் மைசூர்ப்பாகு. நெய்யிலே செஞ்சது.” "ஏது?" . . "அவளுசி திருவிழாவுக்குப் போயிருந்தேன். ட்ராமா. ஒட்டல்லே வாங்கிட்டு வந்தேன். அசல் நெய்யிலே தயாரிச்சதுன்னு போர்ட்லே எழுதியிருந்தது." "அது நெய்யில்லே. பொய் அது சரி, நாட்டாமைக் காரரைப் பார்த்தியா?. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/26&oldid=758708" இலிருந்து மீள்விக்கப்பட்டது