பக்கம்:ஊரார்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 மீன் குழம்பு வாசனைக்கு நாய் ஓடி வந்தது. அவன் சாப்பிட்ட பிறகு, "சாமி கிட்டே பத்து ரூபா பணம் கேக்கலாம்னு வந்தேன். சாமியே சங்கடத்திலே இருக் காங்களே; நான் வரட்டுங்களா?..." என்று இழுத்தபடி எழுந்தான். < "பத்து ருவாய்க்கு அப்படி என்ன நெருக்கடி?” 'அரிசி வாங்கணும். சம்பளம் வாங்கலையே! சஸ்பெண் ட்லே இல்லே இருக்கேன்?" "ஒகோ! அப்படியா! இந்த வாச்சை எடுத்துக்கிட்டுப் போ. யார் கிட்டேயாவது கொடுத்து ஒரு அம்பது ருவா கடன் வாங்கிட்டு வா. எனக்கு நாப்பது ருவா கொடு. ஒரு மாசத்துலே திருப்பிக் கொடுத்துடலாம்' என்ருர் strl&uurrif. . "இது ரது சாமி வாச்?" "வேதாசலம் குடுத்தான். - "சும்மாக் குடுக்க மாட்டானே. கஞ்சளுச்சே! ஏதோ களுக்கு இருக்குது...” என்று இழுத்தான் பழனி. "இருக்குன்னு வச்சுக்கயேன் என்ருர் சாமியார். பழனி ஒமேகாவை வாங்கிக் கொண்டு அவசரமாகப் புறப்பட்டான். சாமியார் கிணற்றடிக்குப் போய் தண்ணிரைச் சேந்தித் தலையிலே கொட்டிக் கொண்டார். ‘சாமியாராச்சே போனப் போகுதுன்னு குடுத்தா, இது நாயமா இருக்கா உனக்கு? x. . சனிக்கிழமை வருவேன். கொடுத்துடனும். இல்லே, நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/30&oldid=758713" இருந்து மீள்விக்கப்பட்டது