பக்கம்:ஊரார்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


荔霍 தலையைத் துவட்டிக் கொண்டார். நெற்றியிலும் உடம்பிலும் திருநீற்றைப் பூசிஞர். பிள்ளையாரைச் சுற்றி வந்தார். குளித்ததும் திடீரென்று பசி வேகம் தோன்றி வயிற்றுக்குள் உஷ்ண அலை புரண்டது. கட்டிவில் போய் உட்கார்ந்து டியன்பாக்ஸை எடுக்க கையை விட்டுத் துழாவினர். அது தட்டுப்படவில்லை. குனிந்து தரையில் பார்த்தார். இல்லை, எழுந்தார். தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வந்தார். காணவேயில்லே.

  • ராஜாத்தி எடுத்துப் போயிருப்பாளோ?

மரத்தின்மீது ஏதோ சலசலப்பு கேட்டது. அண் ந்ைது பார்த்தார். அரச மரத்தின் மீது உட்கார்ந்திருந்த குரங்கின் கையில் அந்த டியன்பாக்ஸ் இருந்தது. அது அந்த அலுமினிய டியன் பாக்ஸைக் காலி செய்து விட்டு தொப்பென்று கீழே போட்டது. ‘பிச்சையெடுத்தாளும் பெருமாளு, அத்தைப் பிடுங்கி ஞனும் அனுமாரு. இந்தக் குரங்கு எப்போ வந்தது இங்கே? நேற்று நரிக்குறவங்களோடு வந்திருக்குமோ? குமாரு இட்லி கொண்டு வந்தான். தேங்காய்ச்சட்னி சலவை செய்த மாதிரி. 'ஏதுடா! - - வனஜா அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னங்க்... "வாயிலெடுக்கருங்களா இன்னும்?" "இல்லே. சரியாயிடுச்சாம். சொல்லச் சொன்னங்க். புள்ளார் விபூதி வாங்கிட்டு வரச் சொன்னங்க. • அப்படியா? மாமன் எங்கே போயிருக்கான்?" சசேலம், ..”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/31&oldid=758714" இருந்து மீள்விக்கப்பட்டது