பக்கம்:ஊரார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


"திருப்பிக் கொண்டு வெச்சிடு. திருடக் கூடாது. பொய் பேசக் கூடாது. தெரிஞ்சுதா! இதுக்குத்தான் திருக் குறள் படிக்கனுங்கிறது!" "ஒண்ணே ஒண்ணு எடுத்துக்குங்க..." "திருட்டு சொத்து. தொடமாட்டேன். கொண்டு போயிடு...” குமாரு உற்சாகம் குறைந்து வீட்டுக்குப் போனன். பழனி திரும்பி வந்தான். பத்து ரூபாய் நோட்டுகளே எண்ணிச் சாமியாரிடம் கொடுத்தான். 'கிடைச்சுட்டுதா பணம்?" 'எண்பது ரூபா கெடச்சுது...” 'இந்தா. நீ இருபது வச்சுக்கோ. பணம் கெடச்சுதும் திருப்பிக் கொடு, போதும். போறப்போ ஆப்பக்கடைக் காரம்மாவிடம் இந்த ரூபாயைக் கொடுத்துடு என்று இன்னொரு பத்து ரூபாயை எடுத்துப்பழனியிடம் தந்தார். "அந்த பொம்பளையைச் சும்மா விடக்கூடாது சாமி மரியாதையில்லாமப் பேசிட்டாளே, மனசு கொதிக்குது. எனக்கு என்ருன் பழனி. "என்னைத்தானே பேசின; நீ ஏன் கோபப்படறே? போ போ-பழனியைச் சாந்தப்படுத்தினர் சாமியார். அடுத்த நிமிடம் குமாரு இரைக்க இரைக்க ஓடி வந் தான். "டெய்லர் கேசவன நல்லபாம்பு கடிச்சுட்டுதாம். வண்டியிலே போட்டுக் கிட்டு வராங்க... என்ருன். நாலைந்து பேர், வண்டியிலிருந்த கேசவனைத் தூக்கி வந்து க்ட்டிலில் படுக்க வைத்தார்கள். ராஜாத்தி ஓடி வத்தாள். "ஐயோ, ஐயோ! என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/33&oldid=1281506" இலிருந்து மீள்விக்கப்பட்டது