பக்கம்:ஊரார்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 சற்று தூரம் நடந்தார், தெருக் கோடியில் கமலா எதிரில் வந்தாள். "வாம்மா, நல்ல சகுனம், எதிரிலே வரே! என்ருர் சாமியார். - சபட்டணம் போlங்களா?” "ஆமாம்.” - "எனக்கு ஒரு வழி செய்ய மாட்டீங்களா? என்னைக் கொண்டுபோய் என் புருசன் கிட்டே எப்ப சேர்க்கப் போlங்க?" கண்ணிருகுத்தாள் அந்தப்பெண். 'முருகனை வேண்டிக்க. பார்க்கலாம். எல்லாம் நல்ல படியா நடக்கும். சிந்தாதிரிப்பேட்டையிலே எங்கே இருக்கான்னு சொன்னே? "சாமிநாயக்கன் சந்துலே சைக்கிள் ஷாப்.” "டயம் கிடைக்சா பார்க்கறேன். அளுவாதேம்மா. நல்ல காலம் பொறக்கும், புள்ளையாரைச் சுத்திட்டு போ.: நாலு நாள் கழித்து சாமியார் திரும்பி வந்தார். ஊரில் ஏதோ பெரிய ரகளே நடந்திருப்பதுபோல் தோன்றி யது. சூழ்நிலை சரியில்லே. எல்லார் முகத்திலும் ஒரு திகிலும் பயமும் தெரிந்தது. - "இன்னுடா விசயம், குமாரு? ஊர்லே ஒருத்தன் முகத்திலேயும் சிரிப்பைக் காணுேம்” என்று ஆவலோடு விசாரித்தார் சாமியார். "ஒரு கொள்ளைக்கூட்டம் வந்து ஊரையே கலக் கிடுச்சு.” "என்னது, கொள்ளைக் கூட்டமா? என்னடா சொல்றே?" என்று கட்டிலை நிமிர்த்திப் போட்டார் சாமியார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/36&oldid=758719" இருந்து மீள்விக்கப்பட்டது