பக்கம்:ஊரார்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 நடந்தார். செருப்பு கடித்தது. அதை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு வெறும் காலுடன் நடந்தார். திரும்பத் திரும்ப மனித முகங்களைப் பார்த்து அலுத்துப் போயிருந்ததால் மிருகக் காட்சிச் சாலைக்குப் போளுர். மிருகங்கள் அதிகமில்லை. இருந்த சில மிருகங் களும் நாளொரு எலும்பும் பொழுதொரு தோலுமாக வளர்ந்து கொண்டிருந்தன. கூண்டுக்குள் ஒரு புவி, செத்துப் போனது போல், துரங்கிக் கொண்டிருந்தது. மூச்சு விட்டுக் கொண்டிருப்பது ஒட்டிய வயிறு உப்பி வடிவதிலிருந்து தெரிந்தது. புலியைப் பார்த்தபோது அவுட்போஸ்ட் பழனியின் நினைவு வந்ததுசாமியாருக்கு. மயில் பார்த்தார். முருகன் நினைவு வரவே, நேராகத் திரும்பி நடந்து, நடந்து நடந்தே கந்தசாமிக் கோயிலை அடைந்தார். அர்ச்சனே நடந்து கொண்டிருந்தது. ஒதுவார் நின்றபடியே கணிரென்ற குரலில் திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். சாமியாருக்குத் தண்டபாணி தேசிகர் நினைவு வந்தது, என்னமாய்ப் பாடுவார்?" விபூதியைப் பூசிக் கொண்டு வள்ளி தேவானையைச் சேவித்துவிட்டு கந்த கோட்டத்தை வலம் வந்து வெளி யேறினர். பக்கத்திலிருந்த புத்தகக்கடையில் கந்தர் அனுபூதி, அபிராமி அந்தாதி இரண்டையும் வாங்கிக் கொண்டார். - சிவப்புப் பட்டைக் கரை போட்ட பிள்ளையார் துண்டு ஒன்று, நல்ல சாம்பிராணி கொஞ்சம் வாங்கிக் கொண்டதும் பஸ் ஏறி வள்ளுவர் கோட்டம் போனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/38&oldid=758721" இருந்து மீள்விக்கப்பட்டது