பக்கம்:ஊரார்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


39 சிற்பங்கள் நிறைந்த அந்தப் பெரிய தேர், வள்ளுவர் சிலே, விசால மண்டபம், வழவழப்பான தரை, குறள் வாசகங்கள் இவ்வளவும் பார்த்தபோது தமிழ் உணர்வு மேலோங்கி உணர்ச்சி வசப்பட்டுப் போளுர், ‘இனி ஒரு முறை வள்ளுவனும் பிறந்து விட முடியாது, அவனுக்கு இப்படி ஒரு மண்டபமும் யாரும் கட்டிவிட முடியாது' என்று எண்ணிக் கொண்டார். அங்கிருந்து ஜெமினியை அடைந்தார். மேம்பாலம் சென்னையின் ஜாடையை மாற்றியிருந்தது. பாலம் இல்லாதபோது அந்த இடம் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பார்த்தார். அப்புறம், காதலன் என்ற பெயரில் கிழவன், குமரியைக் கட்டிப் பிடித்துக் குலவும் கண்ணராவி பானர்கள் வரிசை. இவற்றுக்கிடையில் ஆதி சங்கரர். டிரைவ்-இன், ஸ்டெல்லா எல்லாவற்றையும் கடந்து சோளா ஒட்டல்வரை போளுர். அலது பக்கம் திரும்பி சோவியத் கல்ச்சரைத் தாண்டி ஒரு தெருவில் புகுந்து இன்னுெரு சந்தில் திரும்பி கடைசியாக ஒரு பங்களாவுக் குள் நுழைந்தார். சாமியாருக்குத் தெரிந்த பணக்கார முதலியார் பங்களா அது. ஒரு அல்சேஷன், ஒரு வெள்ளை பாமரே னியன், மாம்பழக் கலரில் ஒரு கூர்க்கா, பெரிய நாகலிங்க மரம், ஒரு ஹெரால்ட், ஒரு அம்பாசிடர், வயதான புஷ்டி மீசை டிரைவர், கான்வெண்ட்டுக்குப் போகிற குழந்தை, டி.பன்பாக்ஸ்-இவ்வளவும் அவர் கண்ணில் பட்டன; பட்டனர். 'முதலியார் இருக்காரா?” "ஹாஹாம் என்ருன் கூர்க்கா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/39&oldid=758722" இருந்து மீள்விக்கப்பட்டது