பக்கம்:ஊரார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? 'நட்சத்திரமா? 'இல்லே, வியாதி... "மூலத்துக்குக் கைகண்ட மருந்து வெச்சிருக்கேன். சூரணம் தரேன். தேன்லெ குளைச்சு ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுங்க. மூலம் நிர்மூலமாயிடும் என்ருர், பெண் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். விரல்களை மடக்கிக் கணக்குப் போட்டார். ஏளு ஏளு ஏளு... எட்டு, எட்டு, எட்டாவது வீட்டிலே சனி இருக்கான், இன்னும் ரெண்டு மாசத்துலே சரியா யிடும். நாற்பது நாளைக்கு நவக்கிரகம் சுத்தி சனி பகவா னுக்கு விளக்கேத்தி வெச்சா எல்லாம் சரியாயிடும். அப் புறம்...நான் புறப்படட்டுமா? என்று எழுந்தார் சாமியார், * - "எங்கே இவ்வளவு அவசரமாப் புறப்பட்டுட்டீங்க? இப்பத்தானே வந்தீங்க? வண்டி அனுப்பவா? ஹார்லிக்ஸ் சாப்பிடpங்களா? வேளும். வைத்தியம் செஞ்ச இடத்திலே தண்ணி கூடக் குடிக்கமாட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே என்னைப்பத்தி...? 'திடீர்னு மெட்ராஸுக்கு வந்திருக்கிங்க...ஏதாவது விசேஷம் உண்டா? "நான் தங்கியிருக்கிற மரத்தடியிலே ஒரு பிள்ளையார் ரொம்பக் காலமா ஆகாசம் பார்த்துக்கிட்டிருக்காரு. அவருக்கு ஒரு கூரை போடணும். அது விசயமா சிவாஜி கணேசனப் பாத்து ஏதாவது கேக்கலாம்னு வந்தேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/41&oldid=758725" இலிருந்து மீள்விக்கப்பட்டது