பக்கம்:ஊரார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


"செத்தவன் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க? "இன்னும் சரியாத் தெரியலையே! பாடி போஸ்ட் மார்ட்டத்துக்குப் போயிருக்கு...மெட்ராஸ் போன காரியம் என்ன ஆச்சு சாமி?” - 'பளம்தான்; ஆன இங்கே இப்படி ஆயிடுச்சே, ரெண்டுநாள் ஊர்லே இல்லே. அதுக்குள்ளே இத்தனே அலாட்டாவா?: பழனி போய்விட்டான். சாமியார் பையைப் பத்திரபடுத்திவிட்டு கிணற்றடிக்குப்போய் வெகுநேரம் குளித்தார். டீ போட்டுக் குடித்தார். குமாருவிடம் காசு கொடுத்து இட்லி வாங்கிவரச் சொன்னர். 'குமாரு போனதும் கமலா வந்தாள். பிள்ளையாரைச் சுற்றிப் பெருக்கித் தண்ணீர் தெளித்தாள். கோலம் போட்டாள். விளக்கேற்றிச் சூடம் கொளுத்தினள். பிறகு சாமியாரிடம் வந்து போன காரியம் என்ன ஆச்சுங்க?" என்று ஆவலோடு கேட்டாள். "நீ எதிர்லே வந்தே நல்ல சகுனம். எல்லாம் பளமா முடிஞ்சுது. உன் புருசனேக்கூடப் பார்த்துப் பேசினேன். "பேசினீங்களா? என்ன சொன்னரு?" 'வருவான்னுதான் தோணுது. நல்ல"ாதிரியாத்தான் பேசினுன். யாரோ அவன் மனசைக் கலைச்சிருக்காங்க. நான் எல்லாத்தையும் வெவரமா எடுத்துச் சொன்னேன். என் பேச்சிலே நாயம் இருக்கிறமாதிரி தலையாட்டினன். நாளேக்கே புறப்பட்டு வந்து கமலாவைக் கூட்டிக்கிட்டுப் டோ, அவளேக் கண்கலங்கவிடாதே. தங்கமான பெண் ஜன்னு சொல் விட்டு வந்தேன். வருவான்னுதான் நினைக்கிறேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/47&oldid=1281513" இலிருந்து மீள்விக்கப்பட்டது