பக்கம்:ஊரார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கமலா மெளனமாக நின்முள். நீர் நிறைந்த சோக விழிகளோடு, நம்பிக்கையோடு, நன்றியோடு, சாமி யாரைப் பார்த்தபடி நின்முள். "கையிலே என்ன அது, எண்ணெயா? இப்படிக் கொஞ்சம் கொடு. செருப்பு காலைக் கடிச்சுட்டுது. கடிச்ச எடத்துல தடவறேன். ஆமாம்: உங்க ஆட்டுக்குக் கொள்ளேக்காரங்க வரலையா?” "எங்க ஆட்லே என்ன இருக்குது? சினிமாக் கொட்டா தங்கப்பன் ஆட்லேதான் ஏகப்பணம் போயிட்டுதாம்." "அதோ தபால்காரர் வரார் பாரு. உனக்குத்தரன் ஏதோ லெட்டர்வருது. கபாலி எளுதியிருப்பான் என்ருர் சாமியார். கமலாவிடம் ஒரு தபாலைக் கொடுத்துவிட்டுச் சென்ருர் போஸ்ட்மேன். - அது கமலாவின் புருசன் கபாலி எ திய கடிதம்தான். ワ கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் கமலா. கபாலி என்ன எளுதியிருக்கான்? நல்ல சமாசாரம் தானே?" - செருப்பு கடித்த இடத்தில் எண்ணெயைத் தடவிக் கொண்டே கேட்டார் சாமியார். - "ஆமாங்க; அடுத்த வெள்ளிக் கிழமை வராராம். உடனே புறப்படனுமாம்.' "உனக்கு நல்ல க்ாலம் பொறந்துட்டுதுன்னு சொல்லு. நான் சொல்லலேயா, கபாலி வருவான்னு. பிள்ளையாரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/48&oldid=758732" இலிருந்து மீள்விக்கப்பட்டது