பக்கம்:ஊரார்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஊரார்
1

ரச மரம் சலசலத்துக் கொண்டிருந்தது.

அதனடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து டீ குடித்தபடியே, செய்திகளை முந்தித் தரும் நாள்தாள் ஒன்றில் ஆழ்ந்திருத்தார் ஆலங்காட்டுச் சாமியார்.

'கமலா (வயது இருபது) என்ற பெண்ணும் ஜெயசந்திரன் என்ற வாலிபனும் (வயது 27) ஓட்டல் அறைக்குள் விஷம் குடித்து இறந்து கிடத்தனர். போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்,' என்று வாய் விட்டுப் படித்த சாமியார்: "பொழுது விடிஞ்சா ஒரு நல்ல செய்தி கிடையாதா? தற்கொலை செய்து கொண்ட ஜோடி, தடம் புரண்ட ரயில், ஜாக்பாட் மாரடைப்பு, வெளிநடப்பு, கதவடைப்பு. கடத்தல், பதுக்கல், கொள்ளை, கொலை, சதக்! சதக்!..."

சிரித்துக் கொண்டார். அவர் சிரிக்கும்போது கண்கள் இடுங்கி விழிகளும் சேர்ந்து சிரிக்கும்.

"டீ ஆறிப் போகுது தாத்தா..." என்றான் குமாரு. சின்னப்பையன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/5&oldid=1232819" இருந்து மீள்விக்கப்பட்டது