பக்கம்:ஊரார்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


53 கொடுத்து விட்டு வாங்க என்று அவசரப்படுத்தினன். டாக்டர் ஸ்கூட்டரில் ஏறி அரசமரத்தடிககு வந்தார். குமாரு அதே வேகத்தில் பின்னேடு ஓடி வந்தான். - சாமியார் நினைவின்றி முனகிக் கொண்டிருந்தார். இதற்குள் கமலா அங்கே வந்து விட்டாள். சாயியார் முதுகிலும் மார்பிலும் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் பார்த்தார் டாக்டர். பல்ஸ் பார்த்தார். கட்ைசி யில் தர்மாமீட்டர் வைத்துப் பார்த்து விட்டு, நூத்தி மூணு இருக்குது...' என்று சொல்லி ஒரு இஞ்செக்ஷன் போட்டார். 'டிஸ்பென்ட்ரிக்கு வாடா மருந்து தரேன்' என்று குமாருவைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போளுர். ஊரில் யாருமே சாமியாரை வந்து பார்க்கவில்லை. வேதா சலம், நாட்டாண்மைக்காரர், டிராமாககாரி ரத்னபாய், பிளேடு புக்கிரி, டெய்லர் கேசவன், ஆப்பக் கடைக்காரி அத்தனை பேரும் ஊரில்தான் இருந்தார்கள். ஆளுல் யாருமே சாமியாரை எட்டிப் பார்க்கவில்லை, கமலா மட்டும் சாமியாருக்கு பார்லி கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குமாரு, டாக்டர் கொடுத்த மாத்திரை, பவுடர், மிக்சர் மூன்றையும் சாமியாருக்கு வேளே தவருமல் கொடுத்துக் கொண்டிருந்தான். சாமியார் சாயந்திரம் கொஞ்சம் கண்விழித்துப் பார்த்தார். தங்கப்பனும் குமாருவும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். • தங்கப்பனைப் பார்த்து 'வா, தங்கப்பா! கொள்ளைக் காரங்க வந்தாங்களாம்...' என்று ஈனசுரத்தில் கேட்டார் சாமியார். * "ஆமாம்: நகை நட்டு, வெள்ளிப் பாத்திரம், பணம் எல்லாம் போயிட்டுது...' இi-த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/53&oldid=758738" இருந்து மீள்விக்கப்பட்டது