பக்கம்:ஊரார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


பார்த்தார். ரத்னபாயைப் பார்த்தார். டெய்லர் கேசவனப் பார்த்தார். ஆப்பக் கடை ராஜாத்தியைப் பார்த்தார். பிளேடு பக்கிரியைப் பார்த்தார். எல்லாரும் தலையைக் கவிழ்த்து கொண்டார்கள். ம்...ம்'சாமியார் ஒரு முடிவுக்கு வந்தார். 'உங்களுககாக, நீங்க வாழறதுக்காக என்னைப்போகச் சொல் lங்க் இல்லையா?" என்று அழுத்தமாக ஆவேசமாகக் கேட்டார். "ஆமாம், ஆமாம், ஆமாம். ஆமாம், ஆமாம், ஆமாம்...'-பல குரல்கள், 'சரி ஒரு நாள் அவகாசம் கொடுங்க. நாளைக்கு ராத்திரி பத்து மணிக்கு இதே இடத்துக்கு எல்லோரும் வாங்க. என் முடிவைச் சொல்றேன்" என்ருர் சாமியார், சரி; சரி; சரி; சரி; சரி; சரி;" - எல்லோரும் மெதுவாகக் கலைந்து சென்றர்கள். கூட்டத்தோடு சேர்ந்து குமாருவும் போனன். பல்லை நற நறவென்று கடித்துக் கொண்டேபோருன். - சாமியார் கட்டிவில் பாணரை இழுத்துப் போட்டுக் கொண்டார். சிரித்தார். சார்மினர் பற்ற வைத்து ஊதினர். ஆட்டுக்கார அலமேலு புன்னகை பூத்தாள். "அலமேலு, உன்னை விட்டா போகச் சொல்றே?" கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டார். வானம் நிர்மலமாயிருந்தது. - தாரத்தில், டெண்ட் சினிமாவிலிருந்து கண்ணதாசன் பாடல் ஒலித்தது. போனல் போகட்டும் போடா:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/64&oldid=1281521" இலிருந்து மீள்விக்கப்பட்டது