பக்கம்:ஊரார்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 'என் அபிப்பிராயத்தை யாரும் கேக்கலையே!' "உன் அபிப்பிராயம் என்ன? இப்பத்தான் சொல் லேன்,' "இத இருங்க வரேன்” என்று கூறி, கிணற்றடிக்குப் போனன் பழனி. தண்ணீர் சேந்தி வாயைக் கொப்பளித் தான். முகத்தைக் கழுவினன். இதற்குள் டீ வந்தது. - சாமியாரும் பழனியும் அதைக் குடித்தார்கள். சுடச் சுட அது வயிற்றில் இறங்கியதும்தான் சாமியாருக்குச் சற்று சுறுசுறுப்பு வந்தது. இரண்டு சார்மினர் எடுத்து பழனிக்கு ஒன்று கொடுத்துத் தானும் பற்ற வைத்துக் கொண்டார். ... "என்ன பள்ளி? என்ன செய்யலாம் சொல்லு!” "நீங்க எதுக்கு பலியாகணும்? நீங்களா கொலை செஞ்சீங்க? 'இல்லே..." "அப்புறம் நீங்க எதுக்கு போகப் போlங்க: போகலேன்ன ஊர்லே என்னைச் சும்மா விடமாட் டாங்க போலிருக்கே. ஊரைப் பகைச்சுகிட்டு அப்புறம் ஒளுங்கா வாள முடியுமா?” என்ன செஞ்சிடுவாங்களாம்: "நான் ஆண்டி ஊருக்கு எளைச்சவன். என்ன வேணு லும் செய்வாங்க.” . "அதனுலே...?” "நான் போயிடறதே மேல். நான் இருந்து யாரைக் காப்பாத்தப் போறேன்? நான் போறதஞலே இந்த ஊருக்கு ஆபத்து இல்லேன்ன அதுக்காக நான் தியாகம் செய்தா என்ன? ; : . . :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/66&oldid=758752" இருந்து மீள்விக்கப்பட்டது