பக்கம்:ஊரார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


"காதும் காதும் வெச்சாப்பல யாரையாவது அனுப்பி வைச்சுடறதுதான் நல்லது. ஆளு நீங்க போகக் கூடாது, ஊர்லே யாராவதுபோகட்டும். ஒருபுலி வந்திச்சு. அதையே இந்தப் போலிசாலே புடிக்க முடியல்லே. என்னை சஸ்பெண்ட் செஞ்சு வெச்சிருக்காங்க. கொள்ளைக்காரங் களேயா புடிச்சுடப் போருங்க? விடுங்க சாமி. என்ன நடக்குதுன்னு பார்த்துடுவோம். நான் இன்னக்கி ஒரு கேஸ் விசயமா கூடலூர் போறேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க. நான் வரவரைக்கும் எந்த முடிவும் எடுக்காதீங்க. என்று கூறிப் புறப்பட்டான் பழனி. காலேயிலிருந்து குமாருவைக் காணுமல் சாமியாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆப்பக்கார ராஜாத்தி சொன்னாள்: 'குமாருக்கு ஒடம்பு சொகம் இல்லையாம். ஒருவேளை மாரியாத்தாளாயிருக்குமோன்னு சந்தேகப்படருங்க” "என்னது? சாமியார் பதறினர். சட்டென்று கிணற் நடிக்குப் போளுர். குளித்தார். விபூதி பூசிக் கொண்டார், செடியிலிருந்து வேப்ப இலையைக்கொத்தாக ஒடித்துக் கொண்டார். நேராகக் குமாருவின் வீட்டுக்கு நடந்தார், அந்த வாசலிலுள்ன ஓடுகளின் இடுக்கில் அந்த வேப்பிலேக் கொத்தைச் செருகினர். உள்ளே எட்டிப் பார்த்தார். வேதாசலம் தலை தெரிந்தது. 'குமாரு இருக்காளு? - சாமியார் குரல் கேட்டு. வேதாசலம் விரைந்து வந்தான். "இருக்கான். ராத்திரி. வந்து படுத்தவன்தான், மாரியாத்தாளாயிருக்குமோன்னு தோணுது..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/68&oldid=1281524" இலிருந்து மீள்விக்கப்பட்டது