பக்கம்:ஊரார்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


69 சாமியார் உள்ளே போய் குமாரு பக்கத்தில் நின்று *குமாரு” என்று கூப்பிட்டார். அவன் கண் திறந்து பார்க்கவில்லை. ‘சாமி! சாமி! போவாதிங்க, போவாதிங்க. நீங்க போன நானும் செத்துடுவேன்” என்று ஜுரவேகத்தில் அலறிக்கொண்டிருந்தான் குமாரு. 'எனக்கும் சந்தேகமாத்தான் இருக்குது. எதுக்கும் மாரியாத்தாளுக்குப் பொங்கல் வைக்கிறேன்னு வேண்டிக் குங்க. சரியாப்போயிடும். ஊர்லே எங்க பார்த்தாலும் ஒரு மாதிரியா இருக்குது.” விபூதி எடுத்துக் குமாருவின் நெற்றியில் இட்டார். சாமியார் கண் கலங்கிப்போனர். அவன் அலறல் அவரைக் கலக்கிவிட்டது. திரும்பி மரத்தடிக்கு வந்தார். பகலெல்லாம் நல்ல வெயில் அடித்தது. புழுதிக் காற்று வீசியது. அந்தக் காற்று கீழே கிடந்த அரசமரத்துச் சருகுகளே அடித்துக் கொண்டு போயிற்று. பகல் வேளைச் சோம்பேறித்தனம் கிராமத்தைக் கவ்வியிருந்தது. டெய்ல ரிங் மெஷின் சத்தம், காகங்கள் கரையும் ஒலி, கழுதைகள் கத்தும் ஓசை, தூரத்தில் நெடுஞ்சாலையில் லாரிகள்பஸ்கள் ஒடும் தேச்லான இரைச்சல், இதெல்லாம் சாமியார் காதில் விழுந்து கொண்டிருந்தன. இரண்டு அணில்கள் ஒன்றையொன்று துரத்திப் பிடித்துக் கொண் டிருந்தன. சாம்யார் எண்ணமிட்டார். விசிறியால் விசிறிக் கொண்டார். படுத்தார், புரண்டார், எழுந்தார், மஞ்சள் வெயில் அடித்து இரண்டு துர்றல் போட்டன. மண் வாசனை அடித்தது. இருட்டு வந்தது. ராத்திரி எட்டு மணிக்கு எல்லோரும் மரத்தடியில் கூடி விட்டார்கள். சாமியார் என்ன சொல்லப் போகிருர் stste —5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/69&oldid=758755" இருந்து மீள்விக்கப்பட்டது