பக்கம்:ஊரார்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 ன்ன்பதை அறிந்து கொள்வதில் எல்லோருமே ஆவலாக இருந்தார்கள். - "என்ன முடிவுக்கு வந்தீங்க சாமி?’- நாட்டாமை கேட்டான். "நான் எந்தக் குத்தமும் செய்யாதப்போ என்னை ஏன் போகச் சொல் lங்க? உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிச்சு அவனை அனுப்புங்களேன்...-சாமியார் குரல் தீர்மானமாக ஒலித்தது. "யாரும் ஒத்துக்கிடலையே..." "மேத்தா, வாராவதிக்கடியிலே செத்துப் போயிட் டான், லாரி மோதியிருக்குது. யாரோ துரத்தியிருக் காங்க. கைகலப்பு நடந்திருக்குதுங்கற வரைக்கும் தெளி வாத் தெரியுது. அப்புறம் துரத்தி ஒடினவன் யார் என்ப தைக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே?" "முடியலையே... "அதுக்கு நான் என்ன செய்யட்டும்?" நீங்கதான் போகனும். இதுதான் ஊரார் தீர்ப்பு..." "தீர்ப்பா, அபிப்பிராயமா? வேண்டுதலா? தெளிவாச் சொல்லுங்க..." - "அபிப்பிராயம், வேண்டுதல், தீர்ப்பு எல்லாம்தான்' என்ருன் நாட்டாமை. - "நான் போகல்லேன்ன? போக வைப்போம். என்ன செய்வீங்க?" "அதைச் சொல்ல முடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/70&oldid=758757" இருந்து மீள்விக்கப்பட்டது