பக்கம்:ஊரார்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


፵፩ ‘'எதுக்கு நிஜத் துப்பாக்கி?” "இந்த ஊராரை நிஜமாகவே ஒருதரம் சுடனும் போல இருக்கு” என்ருன் குமாரு. "நீ துப்பாக்கியிலேயே இரு படிடா. வா. திருக்குறள் சொல்லித் தரேன். இப்படிப் பிள்ளையாருக்கு முன்னலே வந்து உட்காரு. வா. உன்னைப் பெரிய படிப்பாளியாக்கா மல் நான் விடப்போறதில்லை. அதான் ஊரார் கிட்டே நிறையப் பணம் வாங்கி வச்சிருக்கேனே. அவ்வளவை யும் உன் படிப்புக்குச் செலவழிக்கிறேன். எனக்கெதுக்கு அந்தப் பணம்?’ என்று கூறி உரத்த குரலில் பயங்கர மாகச் சிரித்தார். அம்மாதிரி அவர் சிரித்ததை ஊரார் அதுவரை கண்டதில்லை. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/75&oldid=758762" இருந்து மீள்விக்கப்பட்டது