பக்கம்:ஊரார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ཏྣ་དྷཱ་ཡཱ་དུམ་བུར་སྣ་ !: فسمعتصميميجي يتسمعتي تعتبسسسستعمم سمعته ஆசிரியர் சாவி பற்றி... அத்தa தமிழர்களும் அறிந்த எழுத்தாளர் சாவி. பேராசிரியர் கல்கி அவர்களிடம் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர். கல்கி, ஆனந்த விகடன் இவ்விரு பத்திரிகைகளிலும் நீண்டநாள் பணியாற்றி அனுபவம் பெற்ற பின் தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பேற்று வெற்றிகரமாக கடத்தியவர். கலைஞர் மு. கருணுகிதி, குங்குமம் வார இதழைத் தொடங்குவது என்று முடிவு செய்தபோது, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி கல்ஞர் அழைத்தது ஆசிரியர் சாவியைத்தான். ஓராண்டு காலம் அந்த இதழைச் சிறப்பான முறையில் நடத்தி கலைஞரிடம் ஒப்படைத்த பிறகு சொந்தப் பத்திரிகை தொடங்கும் முடிவில் விலகிஞர். 1979-ல் சாவி வார இதழைத் தொடங்கினர். இன்று புகழ் பெற்று விளங்கும் பல எழுத்தாளர்களே உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. உலக நாடுகள் பலவற்றைப் பலமுறை சுற்றிப் பார்த்தவர். வைகாளியில் மகாத்மாஜியோடு கூடவே கிராமம் கிராமமாக கடந்து சென்று அந்த அனுபவங்களே "நவகாளி யாத்திரை' எனும் த8லப்பில் கல்கியில் எழுதி னர். அந்தக் கட்டுரைகளைப் படித்த ஆசிரியர் கல்கி 'தார்மிகக் கட்டுரைகள்' என்று தமது முன்னுரையில் பாராட்டியுள்ளார் வாஷிங்டனில் திருமணம்' என்ற இவரது நகைச்சுவை சவீனம் தமிழ் வாசகர்களின் பர பரப்பான வரவேற்பைப் பெற்றது. இதுவரை இரண்டு லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. தலவர் காமராஜிடம் நெருங்கிப் பழகியவர். தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942-ல் ஒன்பது மாத காலம் சிறைவாசம் புரிந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/76&oldid=758763" இலிருந்து மீள்விக்கப்பட்டது