பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பகமாடு. நடு ரோட்டில் செத்துக் கிடந்தது. ஆமாம், போகும்போது அவளுக்கு அதிகமான சந்தோஷத்துக்கு வழி செய்த அதே பசுமாடு தான். அவ்வழியே போன வேறொரு பஸ்ஸில் அடிபட்டு இறந்து விட்டது. அது.

அழகான ஜீவன், தனது துள்ளலையும் துடிப்பையும் இழந்து, மரக்கட்டை போல, அசைவில்லாமல் கிடந்தது. அதற்கு எமனாக வாய்ந்த பஸ்ஸும் பக்கத்தில் நின்றது. சிறு கும்பல் கூடியிருந்தது.