இல்லை என்பதும் ஒரு காரணம். அடுத்த தெருவுக்குப் போலாம். ஆனால் 'நீ வாசல்படி தாண்டினியோ, அவ்வளவுதான். உன்னை வெட்டிப் பொங்க லிட்டிருவேன்... உன் காலை முறிச்சிருவேன்.... உன் முதுகுத் தோலை உரிச்சிருவேன்' என்ற ரீதியில் மிரட்டக் கூடிய தாயார் இருக்கிறாளே. அம்மாவிடம் கொஞ்சம் பயமிருந்தது வள்ளிக்கு.
தெருவாசல் படியில் நிற்பதனால் பொழுது போகும் என்பதோடு, புதிய புதிய அனுபவங்களும் கிட்டும். அது வள்ளிக்கு நன்றாகத் தெரியும். ஒரு சமயம் வெள்ளைக்காரத் துரை ஒருவன் அந்த வழியாகப் போனான்.
தோள் மீது துப்பாக்கியைச் சுமந்து கொண்டு, 'தொப்பியும், கால்சராயும் பூட்சும் போட்டுக்கிட்டு, செக்கச் செவேல்னு- ஏயம்மா, அது என்ன நிறம் கிறே! கருனைக் கிழங்கைத் தோலுரிச்சுப் போட்ட மாதிரி போனான்' என்று, அவனைப் பார்த்த பெண்கள் பேசினார்கள்.
'மலைக்குப் போயிருப்பான். முசலு வேட்டை யாட' என்று ஒருவர் அறிவித்தார்.
ஆனால் வள்ளியம்மை என்ன செய்தாள்? தன் வலது கையை உயர்த்தி, நெற்றியில் வைத்து, “ஸலாம் தொரெ!" என்றாள்.
அவன் திரும்பிப் புன்னகை புரிந்தான். "குட் மார்னிங்” அறிவித்து விட்டுத் தன் வழியே போனான். அப்புறம் வள்ளியைக் கைகொண்டு பிடிக்க முடியவில்லை!' துள்ளினாள். ஆடினாள். குதியாய்க் குதித்தாள்.
'வெள்ளைக்காரத் துரை எனக்கு ஸலாம் போட்டாரே!' என்று பாடினாள். அவள் பெருமை
6