பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், அவர்களது உள்ளத்தை அது வாட்டிக் கொண்டே இருந்தது.

அந்தக் கொடிய நாளும் வந்தது. பொழுது விடிந்தது. எல்லா நாட்களேயும் போலவே அன்றும் பறவைகள் கத்தின. தாய்ப் பசுக்கள் தங்களது கன்றுகளைக் கூவி அழைத்தன. சத்தியவானின் தாயும் தந்தையும் கவலை தோய்ந்த முகத்துடன் வழக்கம்போல தங்களது அலுவல்களில் ஈடுபட்டிருந்தனர். அடிக்கடி தங்களின் ஒரே மகனே ஏக்கத்தோடு பார்த்தனர். இதைக் காணக் காண சாவித்திரிக்குத் துக்கம் பொங்கியது. முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஏதோ ஒரு பிரமையுடன் தன் வேலேயில் ஈடுபட்டிருந்தாள்.

சத்தியவான் விறகு வெட்டிக் காட்டுக்குப் புறப்பட்டதும், சாவித்திரியும் அவனுடன் செல்ல எழுந்தாள்.

"ஏன் சாவித்திரி? இது கடுமையான வெயில் காலம். காட்டிலே நீ எங்காவது தனியாகச் சென்று வழி தவறி விடுவாய்.”

"இன்று நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரிதானே?" என்றாள் சாவித்திரி, ஒரு புன்னகையுடன்.