பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



  யமன் இப்படிச் சொன்னானோ இல்லையோ, சாவித்திரியிட்ம் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. அவள் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. அவளது தொய்ந்த தோள்கள் நிமிர்ந்தன. பெரு மூச்சும் கண்ணீரும் மாயமாய் மறைந்தன. யமன் எதிரே ஓர் அற்புத அரசகுமரியாய், கம்பீரமாய் நின்றாள் அவள்.
 "த்சொ. த்சொ! உங்கள் மரபு ஒன்றைத் தகர்க்க நானே காரணமாக இருக்கிறேனே," என்றாள், ராஜகம்பீரத்துடன்.
  "எந்த மரபை?" என் விழிப்போடு கேட்டான் யமதர்மன்.

  "அதுதான், யமன் எடுத்த உயிரைத் திரும்பக் கொடுப்ப தில்லை என்னும் மரபை. நீங்கள் இப்போது எனக்கு நூறு பிள்ளைகளை வரமாகக் கொடுத்துவிட்டீர்கள். என் கணவர் உயிரை எடுத்துச் சென்றுவிட்டால் எனக்கு ஏது குழந்தை?"