பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழு நாள் எச்சரிக்கை

அஸ்தினாபுரத்து அரசனின் பெயர் பரீட்சித்து. அவன் வேட்டையாடுவதிலே மிகவும் வல்லவன். வேட்டையாடும்போது உள்ளக் கிளர்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் என்பதற்காக மட்டுமே அவன் வேட்டையாடுவதில்லை. காட்டுப் பகுதியில் வாழும் மக்கள் நலமாக, மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி வந்தான்.

ஒருநாள் அரசன் வேட்டையாடும்போது, ஒரு மான்மீது அம்பு எய்துவிட்டான். அடிதான் பட்டதே தவிர, அது இறந்துவிடவில்லை. வேட்டை விதிகளின்படி மிருகங்களைக் கொல்லலாமே தவிர, அவற்றை முடமாக்கக் கூடாது. ஒரு மிருகத்தைக் காயப்படுத்தி, அது வேதனையால் துடிதுடிக்கும்படி செய்வது மனிதத் தன்மையற்றது, பாவம் என்றே கருதப்பட்டது. ஆகையால் அரசன் அந்த மானை கொன்று, அதன் வேதனையைத் தீர்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்தான். அதைத் துரத்திக்கொண்டு காட்டுக்குள் சென்றான். காட்டுக்குள் அவன் வெகுதூரம் சென்றதால், அவனு-