பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'ஆ. என் தந்தையின் கழுத்திலே ஒரு பாம்பு’ என்று பதறிக்கொண்டே ஒ டி னு ன் சிருங்கி. ஆனால் தோழன் அவனைப் பிடித்து இழுத்தான்.

'அது வெறும் செத்த பாம்புதான். நமது மாமன்னர், நம்மை யெல்லாம் காப்பாற்றுபவர், கடவுளுக்கு அடுத்தபடி யாக இருப்பவர் என்றெல்லாம் நீ சொல்லுவாயே, அந்த பரீட்சித்துவே சற்று முன்பு உன் தந்தையின் கழுத்தில் அணிவித்தார் இந்தச் செத்த பாம்பை இப்படி அவமானப்பட உன் தந்தை செய்த பிழை என்ன தெரியுமா? அடிபட்ட ஒரு மானைப் பற்றி அரசர் கேட்டார். உன் தந்தை பதில் சொல்லவில்லை. நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அரசர் இரைந்து கத்தினர். பிறகு, இந்தச் செத்த பாம்பை வாளால் எடுத்து இவர் மீது வீசினர். ஆகா, அரசர் வாள் வீச்சில் வல்லவர் தான்! அந்தப் பாம்பு அப்படியே மாலை போலே இவர் கழுத்தில் விழுந்திருக்கிறது. இவ்வளவையும் நான் என் கண்களால் பார்த்தேன்.??

“ஏண்டா, பார்த்தேன் என்கிறாயே. அரசரிடம் இன்று அப்பாவுக்கு மெளனவிரதம் என்று சொல்வதற்கு என்ன?

'என்னது அரசர் உருவிய வாளுடன் நின்றுகொண்டிருக்கிறார், முகத்தில் ஒரே கோபம். அவர் எதிரே நான் போவதா? என் கழுத்தைச் சீவியிருப்பார்’ என்றான் கிருஷா.

சிருங்கி தன் தந்தையையே ஒரு கணம் பார்த்தான். தந்தை மீது அவனுக்கு மிகவும் பாசம். அவரது மகிமை பற்றி ஒரு பெருமை. என் தந்தையை அவமதித்துவிட்டானே அந்த அரசன்! இவரது முகத்திலே பளிச்சிடும் கண்ணியத்தை