பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

போன வேலை முடிந்து உபமன்யு குருகுலம் திரும்பியதும் தெளம்யர் அவனை விசாரித்தார்.

“உபமன்யு, இத்தனை நாளாக நீ தினம் உபவாசம் இருந்தாயா?”

‘இல்லையே!’ என்றான் உபமன்யு, வியப்புடன்.

“அதுதான் பார்த்தாலே தெரிகிறதே. உடம்பு பெருத்திருக்கிறதே. அரண்மனையில் சுவையான சாப்பாட்டை வயிறு முட்டத் தின்றாய் போலிருக்கிறது!”

“இல்லை, குருதேவா.” என்றான் உபமன்யு. “வழக்கம் போல நான் கிராம மக்கள் அளிக்கும் உணவைத்தானே உண்டுவந்தேன். இதற்காக தினம் மூன்று மைல் தூரம் அரண்மனையிலிருந்து நடந்து வந்தேனே.”

“அப்படியா? நீ அந்த உணவுடன் குருகுலத்துக்கு வந்து நான் பார்க்கவில்லையே” என்றார் தெளம்யர்.

அப்போதுதான் உபமன்யுவுக்குத் தன் தவறு புரிந்தது. கிராமத்தில் அவன் பெற்ற உணவை அவன் குருவிடம் சமர்ப்பித்திருக்கவேண்டும். கையால் தலையில் அடித்துக் கொண்டு, ஆசிரம விதியை மீறியதற்காக குருவிடம் மன்னிப்பு வேண்டினான்.

அன்று அவன் கிராமத்திற்குச் சென்றபோது, கிடைத்த உணவு அனைத்தையும் கொண்டுவந்து குருவிடம் சமர்ப்பித்தான், உபமன்யுவின் மன உறுதியைச் சோதிக்க எண்ணினார் குரு. எனவே, உணவு முழுவதையும் தாமே எடுத்துக்