பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மருந்தானால் கூட குருதேவர் சொன்னால்தான் சாப்பிடுவேன்’ என்றான் உபமன்யு உறுதியுடன்.

அவன் இப்படிச் சொன்னதும் அசுவினி தேவர் என்னும் இரட்டையர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். புன்னகையுடன் கைகளே உயர்த்தி உபமன்யுவை ஆசீர்வதித்து, மீண்டும் வானில் எழும்பி நட்சத்திரங்களாயினர்.

பொழுது புலர்ந்தது. மரங்களில் பறவைகள் கீச்சிட்ட ஒலி கேட்டு உபமன்யு விழித்தான். என்ன விந்தை, அவனுக்குப் பார்வை திரும்ப வந்துவிட்டது! அப்பப்பா. மீண்டும் பார்க்க முடிந்ததே என்ற மகிழ்ச்சியில், சுற்று முற்றும் ஒவ்வொரு பொருளையும் கண்குளிர நோக்கினான். நீல வானத்தில் வெள்ளை மேகத்திலே ஒரு புது அழகைக் கண்டான். மலர்களிலே ஓர் இனிமையை உணர்ந்தான். மரத்தின் கிளைகள் ஊடே வீசும் சூரிய ஒளியில், சிறு செடி மொட்டு மலர்வதை ரசித்தான். அடடா ஒரே மரத்திலே எத்தனை வகைப் பச்சை வண்ணங்கள்!’ என்பதை உணர்ந்து வியந்தான். இயற்கை யின் இந்த அழகுகளையெல்லாம்-இத்தனை நாள் கண்ணிருந்தும் காணாத அ ழ கு க ளே -மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.

நே ர மா கிற து, குருகுலத்திற்குத் திரும்பவேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்தான். தன் கைப்பிடிக்குள் ஏதோ இருப்பதை உணர்ந்தான். ஒகோ, அசுவினி தேவர் தந்த அற் புதக் குளிகை’ என்பது நினைவுவந்தது.

கையைப் பிரித்தால், அந்த அற்புதக் குளிகை எங்கேயாவது விழுந்துவிடுமோ என்ற கவலையுடன், மூடிய கையுடனே குருகுலத்தை நோக்கி ஓடினான். அவனுக்குப் பசிக்கவே இல்லை. சோர்வே இல்லே. பயமும் இல்லை. மனத்திலே ஒரு