பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சி, உடலிலே ஒரு சுறுசுறுப்பு. நேரே குருதேவரிடம் , சென்றான்.

'குருதேவா. நான் வந்துவிட்டேன். அசுவினி தேவர்கள் எனக்குப் பார்வை அளித்துவிட்டார்கள். அவர்கள் நான் தின்பதற்கு ஏதோ கொடுத்தார்கள்?’ என்று சொல்லி ஆசிரியரை நிமிர்தது பார்த்தான். ஆனால் நான் தின்னவில்லை.” என்று கூறி, தன் கையைப் பிரித்தான். கையிலே இருந்தது என்ன தெரியுமா? ஒரு பிடி மண், காட்டு மண்.

உபயன்யுவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்ன, எல்லாம் கனவா?’ என்று ஆசிரியரைக் கேட்டான்.

'கனவா? உன்னைப் பொருத்தவரை அது கனவே அல்ல. உண்மைதான். பார்வை மீண்டும் கிடைத்தது போல உண் மைதான்’ என்றார் குருதேவர். பிறகு கனிவுடன், “பார்வை திரும்பியதுபோல, பசியும் வந்ததா? வா. நேற்றிரவு இங்கே யாரும் ஒன்றும் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. வா. பழைய சோறும் தயிரும் தின்னலாம் வா’ என்றார்.