பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகனை வென்ற பீமன்

புகழ் பெற்ற பாண்டவர்களில் ஒருவன் பீமன். பீமனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் சொந்தமான நாட்டை மீட்பதற்காக, கெளரவ சகோதரர் நூறு பேருடன் செய்ததே பாரத யுத்தம். சண்டை நடந்து பாண்டவர்கள ஆட்சியைக் கைப்பற்றினர்கள். அதற்கு முன், கெளரவர்கள் எத்தனையோ வழிகளில் பாண்டவரை அழிக்க முயன்றனர்.

அப்படி ஒரு சோதனையில் தப்பிய பாண்டவர் ஐவரும் தமது தாயுடன் ஏகசக்கரம் என்ற அமைதியான ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். பலவாறு அலைந்ததால் அமைதியாக இங்கேயே சில நாள், கெளரவர் கண்ணில் படாமல் இருக்கலாம் என்று நினைத்தார்கள். எங்கே தங்குவது என்று யோசித்தபோது, அன்பே வடிவான ஒரு கிராமவாசி, இவர்களைத் தன் வீட்டில் வந்து இருக்கும்படி அழைத்தான். இவர்களும் நன்றியுடனும் மகிழ்ச்சியோடும் அவன் குடும்பத்துடன் வாழ்ந்து வரலானார்கள்.