பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதைக் கேட்டதும் ஒரு கணமும் தயங்காமல் குந்தி அவர்களிடம் சென்றாள்.

"இதோ பாருங்கள், ஏதோ வருத்தமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. என்ன விஷயம் என்று சொல்லுங்கள். என்னல் முடிந்த உதவி செய்கிறேன். உங்களை பயமுறுத்தும் ஆபத்தை நாம் எல்லோருமாகச் சேர்ந்து முறியடிப்போம்” என்றாள் குந்தி.

“தாயே. அன்பாகப் பேசுகிருய். உன் ஆறுதல் வார்த்தை சரிதான். ஆனால் எனது கவலை மனிதராலே தீர்க்கமுடியாத கஷ்டம் அம்மா. கடவுள்தான் கண் திறக்க வேண்டும்" என்று சோகக் குரலில் சொன்னார் குடும்பத்தலைவர்.

"என்ன விஷயம்? முழுவதும் சொல்லுங்கள்" என்றாள் குந்தி.

"சொல்கிறேன்" என்று அந்த மனிதர் குந்தியை முதலில் அமரச் செய்தார். பிறகு அதே சோகக் குரலில் தொடங்கினார்.

"இந்த நாட்டின் அரசன் ஒரு சோனி. ஆட்சி புரியத் தெரியாத அசடு. முழு முண்டம். அந்தச் சோம்பேறி அவனுக்காக ஆளும்படி ஒவ்வொரு ஊருக்கும் அவனுடைய ஆளை வைத்திருக்கிறான். இந்த ஊருக்கும் பக்கத்து ஊர்களுக்கும் அதிகாரியாக இருப்பவன் ஒரு பூதம். 'பகன்’ என்று