பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபத்தால் உதடு துடிக்க, பகன் பீமன் மேல் பாய்ந்தான் பீமன் அசையவில்ல். உடனே புகன் பீமனின் பின்னல் போய் அவனைச் சரேலென்று தூக்கப் பார்த்தான். ஊஹஅம். பலமெல்லாம் சேர்த்து இழுத்தாலும் அநதப பாணடவ வீரன அசைக்கவே முடியவில்லை, பிறகு பகன் தன் ராட்சதக் கை களால் பீமனின் கழுத்தில் வெட்டுவதுபோல அறைந்தான்.

ஏதோ கொசு கடிப்பது போல அலட்சியமாக இருந்தான் பீமன். ருசித்துச் சாப்பிடும்போது தொந்தரவு செய்யாதே, போ' என்று சொன்னுன்.

பகனுக்கு ஒரே ஆச்சரியம். பீமன் ஒரு வண்டிச் சோற்றை யும் தின்று தீர்க்கும்வரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பரபரப்பே இல்லாமல் பீமன் கை கழுவிக்கொண்டான்.

'இப்போது நான் தழார். நீயும் தயாரானல் வா, மோத லாம். என்று சவால் விட்டான் பீமன்,

பகன் தன் முஷ்டியை முறுக்கிக்கொண்டு பீமன் மேல் பாய்ந்தான். பீமன் சரேலென மின்னல் வேகத்தில் நகர்ந் தான். பாய்ந்த வேகத்தில் கீழே விழுந்த பகன் மீது தாவி அவன் தொப்பை மீது ஏறி உட்கார்ந்தான். பகன் உடனே நழுவி உருண்டு, ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி, பீமனை நோக்கி ஓங்கினன். பீமன் மற்ருெரு மரத்தைப் பிடுங்கி தன் மேல் அடி விழாமல் அதைத் தடுப்பாக வைத்துக்கொண்டான். இப்படி இருவரும் மாறி மாறி மரங்களாலேயே அடித்துக் கொண்டார்கள். இந்தப் பரபரப்பில் பறவைகள் காட்டில் தங்கமுடியாமல் கீச்சிட்டுக் கொண்டே அங்குமிங்குமாகப் பறந்தன. பிறகு தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன.