பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓட முயன்றான். ஆனால அவனைத் தப்பவிடவில்லை பீமன்.. பகன் சண்டையிலிருந்து ஓடியபோதெல்லாம் அவனை இழுத்து மொத்துவான் பீமன். கடைசியில் பீமன் கொடுத்த அடியில் பகன் மண்ணைக் கவ்வி விழுந்தான். பீமன், பகனின் முதுகில் கால் ஊன்றி, அவன் தலையையும் கால்களையும் இரு கைகளா லும் இறுகப் பற்றி, மேல் நோக்கி வளைக்கத் தொடங்கினான். பகனின் முதுகெலும்பு முறிந்தது. - காடே அலறும்படி ஓலமிட்டு பகன் மாண்டான். இந்த மரண ஓலத்தைக் கேட்டு பகனின் உறவுக்காரர்கள் ஓடிவந்து பீமனின் காலடியில் விழுந்து கெஞ்சினார்கள். உயிர்ப் பிச்சை வேண்டினார்கள். . பீமன் மிடுக்குடன் சொன்னான்: - << நீங்கள் இந்தக் காட்டில் தொடர்ந்து வாழலாம். ஒரே நிபந்தனை. மனிதர்களை மட்டும் சாப்பிடக்கூடாது. ஏக சக்கரத்து மக்கள் யாரையாவது தின்னவேண்டுமானால் முதலில் என்னைச் சாப்பிடவேண்டும். என்ன சரியா?) -